13 June 2016

எந்­த­வொரு இரா­ணுவ முகாமும் அகற்­றப்­ப­டமாட்­டாது

வடக்கு அர­சி­யல்­வா­தி­களின் அர­சியல் நியா­யங்­க­ளுக்­காக வடக்கில் இருந்து எந்­த­வொரு இரா­ணுவ முகாமும் அகற்­றப்­ப­டமாட்­டாது. அதேபோல் இரா­ணு­வத்­தையும் வெ ளியேற்­றப்­போ­வ­­தில்­லை என்­று அர­சாங்­கமும், பாது­காப்பு தரப்பும் தெரி­வித்­துள்­ளன. வடக்கு முதல்­வரின் கருத்­து­களுக்கு எம்மால் எந்த பதி­லையும் தெரி விக்க முடி­யாது. நிலை­மை­களை எவ்வாறு கையாள்­வது என்­பது தொடர் பில் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ருடன் கலந்­தா­லோ­சித்து தீர்­மானம் எடுக்கப்­படும் எனவும் தெரி­விக்கப்­பட்­ ட­து.

வடக்கில் தொடர்ந்தும்இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்பு உள்­ள­தா­கவும், மக்­களின் மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு இரா­ணுவம் தடை­யாக இருப்­ப­தா­கவும் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ள நிலையில் அது குறித்து பதிலளித்த இராணுவ தள­ப­தியும், பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சரும் இந்த கருத்­துக்­களை முன்­வைத்­துள்­ளனர்.

இது தொடர்பில் இரா­ணுவத் தள­பதி லெப்­டினன் ஜெனரல் கிரி­ஷாந்த டி சில்வா தெரி­விக்­கையில்,யுத்தம் முடி­வுக்கு வந்­ததில் இருந்து வடக்கு கிழக்கு பகு­தி­களில் இரா­ணுவம் நிலை­கொண்­டுள்­ளது. அதற்­கான தேவையும் இருந்­தது. எனினும் கடந்த காலத்தில் ஏற்­பட்ட சிக்­கல்கள் மற்றும் அநா­வ­சி­ய­மான இரா­ணுவ முகாம்கள் என்­பன மக்கள் மத்­தியில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­தின.

எனினும் சமீப காலத்தில் பொது­மக்­களின் காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்­ளன. வடக்கில் மக்­களின் காணி­களில் இருந்த அநா­வ­சிய முகாம்­களை விடு­வித்து அப்­ப­குதி மக்­களை உரிய இடங்­களில் குடி­ய­மர்த்­தி­யுள்ளோம். அதேபோல் இன்று வடக்கில் நிலை­மைகள் சாதா­ர­ண­மான வகையில் அமைந்­துள்­ளன. பொது­மக்­க­ளுக்கு இரா­ணு­வத்­தினால் எந்த இடை­யூறும் ஏற்­ப­டு­வ­தில்லை. அதேபோல் பொது­மக்­களும் எந்த முறைப்­பா­டு­க­ளையும் இரா­ணு­வத்­திற்கு எதி­ராக முன்­வைக்­கவும் இல்லை.
எனினும் வடக்கில் உள்ள அர­சியல் தலை­மைகள் தமது அர­சியல் நிலைப்­பா­டு­களை தக்­க­வைக்கும் வகை­யிலும் சர்­வ­தேச தரப்பின் ஆத­ரவை பெற்­றுக்­கொள்ளும் வகை­யிலும் வடக்கில் இரா­ணு­வ ஆக்­கி­ர­மிப்பு உள்­ள­தென விமர்­சித்து வரு­கின்­றனர். எனினும் இவற்றில் எந்த உண்­மை­களும் இல்லை. வடக்­கிலும் சரி நாட்டில் எந்தப் பகு­தி­யிலும் சரி இரா­ணுவ முகாம்கள் எவையும் அகற்­றப்­ப­டாது. வடக்கு தெற்கு என அனைத்து பகு­தி­க­ளிலும் இராணுவ பாது­காப்பை பல­ப­டுத்த வேண்­டிய தேவை எமக்கு உள்­ளது.

மேலும் சாலாவ இரா­ணுவ முகாமை வேறு இடத்­துக்கு மாற்­று­வது தொடர்பில் பாது­காப்பு அமைச்சு பாது­காப்பு தரப்­புடன் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. பாது­காப்­பான வகை­யிலும் மக்­களை பாதிக்­காத வகை­யிலும் ஆயுத களஞ்­சிய அறை­களை நிர்­மா­ணிக்க வேண்டும். ஆகவே அவை தொடர்பில் நாம் ஆராய்ந்து வரு­கின்றோம். அதேபோல் இந்த வெடிப்பு சம்­பவம் திட்­ட­மிட்ட வகையில் நடந்த ஒன்­றாக அமைய வாய்ப்­பில்லை. எனினும் விசா­ர­ணை­கள் மும்­மு­ர­மாக நடை­பெற்று வரு­கின்­றது என அவர் தெரி­வித்தார்.

இது தொடர்பில் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­தன கருத்து தெரி­விக்­கையில்,வடக்கில் இப்­போது இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்பு என்று கூறு­ம­ளவு எந்த மோச­மான நிலை­மை­களும் இல்லை. சாதா­ர­ண­மான வகை­யி­லேயே அங்கு நிலை­மைகள் உள்­ளன. இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்பில் இருந்த பொது­மக்­களின் காணிகள் மீண்டும் பொது­மக்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் அனா­வ­சிய முகாம்­களை நாம் தகர்த்து பொது­மக்­க­ளுக்கு இடங்­களை வழங்­கி­யுள்ளோம். அதற்­காக வடக்கில் இருந்து இரா­ணு­வத்தை வெளி­யேற்ற முடி­யாது. அநா­வ­சிய முகாம்­களில் இருந்த எமது இரா­ணு­வத்தை பிர­தான இரா­ணுவ முகாம்­க­ளுக்குள் கொண்­டு­வந்­துள்ளோம். அவர்­களால் பொது­மக்­களின் செயற்­பா­டு­க­ளுக்கு எந்த இடை­யூறும் ஏற்­ப­டாது.

மேலும் வட­மா­காண சபையும், வடக்கு முதல்­வரும் இரா­ணு­வத்தை வெளி­யேற்ற கோரு­வ­த­னால் எம்மால் வடக்கில் இருந்து இரா­ணு­வத்தை வெளி­யேற்ற முடி­யாது. வடக்கில் எவ்­வாறு இரா­ணுவம் பாது­காப்பு கட­மை­க­ளுக்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தோ அதேபோல் தெற்­கிலும் இராணுவம் உள்ளது. ஆகவே ஒரு மாகாணத்தில் இருந்து இராணுவத்தை வெளியேற்றி அவர்களை எங்கு கொண்டுசெல்வது? இந்தக் கோரிக்­கை­யில் வெறும் அரசியல் சுயநலம் மட்டுமே உள்ளது. ஆகவே இவர்களின் கருத்துகளுக்கு எம்மால் எந்த பதிலையும் தெரிவிக்க முடியாது. நிலைமைகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்தாலோசித்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

நன்றி- வீரகேசரி

No comments:

Post a Comment