08 June 2016

அர­சி­ய­ல­மைப்பை சாத­க­மாக்கிக்கொள்ள வேண்டும்

அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் குறித்த மக்­களின் கருத்­த­றியும் குழு கடந்த முதலாம் திக­தி­யன்று தனது பரிந்­து­ரை­களை அர­சாங்­கத்­திற்கு சமர்ப்­பித்­துள்­ளது. சிறு­பான்­மை­யினர் சார்­பான பரிந்­து­ரைகள் இவற்றில் முக்­கி­யத்­துவம் பெற்று விளங்­கு­கின்­றன. இந்­நி­லையில் இப்­ப­ரிந்­து­ரை­களை யதார்த்­தப்­படுத்­து­வ­தற்கு சிறு­பான்மை அர­சி­யல்­வா­திகள் அர­சாங்­கத்­திற்கு உரிய அழுத்­தத்­தினைக் கொடுக்க வேண்டும் என்று புத்­தி­ஜீ­விகள் வலி­யு­றுத்தி இருக்­கின்­றனர். மேலும் சிறு­பான்­மை­யினர் உரி­மைகள் தொடர்பில் மேலும் விரி­வாக ஆரா­யப்­பட்டு, உரி­ய­வாறு புதிய அர­சி­ய­ல­மைப்பில் உள்­ளீர்ப்பு செய்­யப்­பட வேண்­டு­மெ­னவும் இவர்கள் வலி­யு­றுத்தி உள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

அர­சி­ய­ல­மைப்பு என்­பது ஒரு நாட்டில் மிகவும் முக்­கி­யத்­துவம் மிக்க ஒன்­றாக விளங்­கு­கின்­றது. ஜன­நா­ய­கத்­துக்கு அர­சி­ய­ல­மைப்பு வலுச்­சேர்க்­கின்­றது. ஐக்­கியம் மிக்க நாட்­டினை கட்­டி­யெ­ழுப்ப அர­சி­ய­ல­மைப்பு உந்துசக்­தி­யாக அமை­கின்­றது. எனினும் இலங்­கையை பொறுத்­த­வ­ரையில் சம­கால அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் அதிருப்­தி­யான வெளிப்­பா­டு­க­ளையே அதிக­மாகக் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. நாட்டின் ஐக்­கி­யத்­துக்கு வித்­திட வேண்­டிய அர­சி­ய­ல­மைப்பு பிரி­வி­னைக்கே தூப­மி­டு­கின்­றது. சிறு­பான்மை மக்­களை அர­வ­ணைத்துச் செல்­வ­தாக இந்த அர­சி­ய­ல­மைப்பு அமை­ய­வில்லை. நாட்டின் ஜன­நா­ய­கத்­தையும் அமை­தி­யையும் சம­கால அர­சி­ய­ல­மைப்பு கேள்­விக்­கு­றி­யாக்கி இருக்­கின்­றது என்­றெல்லாம் பல்­வேறு வகை­யி­லான விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதில் உண்­மையும் இருக்­கத்தான் செய்­கின்­றது. இலங்­கை­யர்­க­ளா­கிய நாம் அர­சியல் யாப்பில் நம்­பிக்கை இழந்­து­விட்டோம். இழந்த இந்த நம்­பிக்­கையை உண்­மை­யான சட்­ட­நெ­றியின் மூலம் மீண்டும் ஏற்­ப­டுத்தும் வரை வடக்கு, கிழக்கு பிரச்­சி­னையை நாம் உண்­மை­யாக தீர்க்கமுடி­யாது என்று திரு­மதி கிஷாலி பின்ரோ ெஜய­வர்­த்தன ஒரு­முறை தெரி­வித்­தி­ருந்தார். கிஷாலி பின்ரோ வீரத்­திற்­கான சர்­வ­தேச பெண்கள் விரு­தினை வென்­ற­வ­ராக விளங்­கு­கின்றார்.

சம­கால அர­சி­யல் ­யாப்பின் மூல­மாக நாட்டு மக்கள் பல்­வேறு துன்ப துய­ரங்­களை அனு­ப­வித்து விட்­டனர். ‘நாம்’ என்ற சிந்­த­னையை விடுத்து ‘நான்’ என்ற சிந்­த­னைக்கே இது அதி­க­மாக இட­ம­ளித்­த­தாக விமர்­ச­னங்­களும் இருந்துவரு­கின்­றன. எனவே சம­கால அர­சி­ய­ல­மைப்பின் அதி­ருப்தி நிலை­களைக் கருத்­திற்­கொண்டு புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்­றினை உரு­வாக்க வேண்டும் என்ற வலி­யு­றுத்­தல்கள் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வந்­தன. இத­ன­டிப்­ப­டையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மை­யி­லான தேசிய அர­சாங்கம் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்­றினை உரு­வாக்க வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து தொடர்ச்­சி­யா­கவே வலி­யு­றுத்தி வந்­தி­ருக்­கின்றார். தேசிய அர­சாங்கம் என்ற எண்­ணக்­கரு சாத்­தி­ய­மா­கி­யுள்ள நிலையில் இத­னூ­டாக பல்­வேறு வெற்றி இலக்­கு­க­ளையும் எட்­டு­வ­தற்கு அர­சாங்கம் உறு­தி­பூண்­டி­ருக்­கின்­றது. இதில் ஒன்­றா­கவே புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கும் முயற்­சியும் இடம்­பெற்­றுள்­ளது.

புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கும் நோக்­குடன் பொது­மக்கள் கருத்­த­றியும் குழு ஒன்றும் நிய­மிக்­கப்­பட்­டது. இக்­குழு நாட்டின் பல பகு­தி­க­ளுக்கும் விஜயம் செய்து மக்­களின் கருத்­து­களைக் கேட்­ட­றிந்து கொண்­டுள்­ளது. தனி நபர்­களின் கருத்­துக்கள், அமைப்­புக்கள் மற்றும் குழுக்­களின் கருத்­துகள் என ­ப­லவும் இதில் உள்­ள­டங்­கு­கின்­றன. சிறு­பான்மை மக்கள் குறித்து எத்­த­கைய விட­யங்கள் புதிய அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்­கப்­ப­டுதல் வேண்டும் என்று சிறு­பான்­மை­யினர் சார்ந்த அமைப்­பு­க்களும் குழுக்­களும் தனி­ந­பர்­களும் தத்­த­மது நிலைப்­பாட்­டினை வெளிப்­ப­டுத்தி இருந்­தனர். இதற்­கேற்ப மலை­ய­கத்தை பொறுத்­த­வ­ரையில் நூற்றி ஐம்­ப­துக்கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­களும் இரு­நூற்றி ஐம்­ப­துக்கும் மேற்­பட்ட தனி­ந­பர்­களும் மலை­ய­கத்­துடன் தொடர்­பு­டைய பல்­வேறு வித­மான கருத்­துக்­க­ளையும் முன்­வைத்­தி­ருந்­தனர். தனி­யான அதி­கார அலகு மலை­ய­கத்தில் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும். காணி­யு­ரிமை மற்றும் வீட்டு உரி­மை ­பெற்ற சமூ­க­மாக இம்­மக்கள் தலை­நி­மிர்ந்து வாழ்­வ­தற்­கான வழி­வ­கைகள் புதிய அர­சியல் யாப்பின் ஊடாக ஏற்­ப­டுத்­தப்­ப­டுதல் வேண்டும். மலை­யக சமூகம் பின்­தங்­கிய சமூகம் என்று கருதி விசேட உத­வி­க­ளையும் சலு­கை­க­ளையும் மலை­யக மக்­க­ளுக்­காக அர­சாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும். இளைஞர் அபி­வி­ருத்தி கரு­திய திட்­டங்­க­ளுக்கு முக்­கி­யத்­து­வ­ம­ளிக்­கப்­ப­டுதல் வேண்டும் என்­றெல்லாம் பல்­வேறு கோரிக்­கைகள் பொது­மக்கள் கருத்­த­றியும் குழு­விடம் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

வடக்கு மக்­களும் மலை­ய­கத்­த­வர்­களின் உரி­மைகள் உரி­ய­வாறு அர­சியல் யாப்பின் ஊடாக நிலை­நி­றுத்­தப்­ப­டுதல் வேண்டும் என்று வலி­யு­றுத்தி இருந்­த­மையும் தெரிந்த விட­ய­மாகும்.

இது­போன்றே முஸ்லிம் சமூ­கத்­தி­னரும் வடக்கு மக்­களும் தத்­த­மது உரி­மை­க­ளுக்கு புதிய அர­சி­ய­ல­மைப்பு உத்­த­ர­வா­த­ம­ளிக்க வேண்டும் என்ற வகையில் பல்­வேறு முன்­வைப்­பு­க்களை பொது­மக்கள் கருத்­த­றியும் குழு­விடம் முன்­வைத்­தி­ருந்­தனர். இந்­நி­லையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு சிறு­பான்­மை­யி­ன­ருக்கு சாதக விளை­வு­களை ஏற்­ப­டுத்தும் என்ற எண்ணம் சிறு­பான்மை மக்­க­ளி­டையே வலுப்­பெற்று வரு­கின்­றது. சிறு­பான்­மை­யி­னரின் எண்­ணங்­க­ளையும் நம்­பிக்­கை­க­ளையும் வீண­டிக்கும் வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு அமைந்­து­வி­டுதல் கூடாது.
இதற்­கி­டையில் கடந்த முதலாம் திகதி அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் குறித்த மக்கள் கருத்­த­றியும் குழு அர­சாங்­கத்­திடம் பல்­வேறு பரிந்­து­ரை­க­ளையும் முன்­வைத்­துள்­ளது. இலங்­கையில் நீண்­ட­கா­ல­மாக இனப்­பி­ரச்­சினை என்­பது புரை­யோ­டிப்போய் இருக்­கின்­றது. இங்­கி­ருப்­பது இனப்­பி­ரச்­சினை அல்ல. பயங்­க­ர­வாதப் பிரச்­சி­னையே என்று இன­வா­திகள் மார்­தட்டிக் கொண்­டாலும் உண்­மையில் இனப்­பி­ரச்­சி­னையே இங்­குள்­ளது என்­ப­தனை புத்­தி­ஜீ­வி­களும் சர்­வ­தே­சமும் நன்­றாகப் புரிந்துகொண்­டுள்­ளனர். இந்­த ­நிலையில் இனப்­பி­ரச்­சினை தீர்வு தொடர்பில் கருத்­த­றியும் குழு பரிந்­து­ரை­களை முன்­வைத்­தி­ருக்­கின்­றது. இதற்­கேற்ப இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வாக மாகாண சபை­களின் முத­ல­மைச்­சர்கள் மற்றும் பிர­தி­நி­திகள் உள்­ளிட்ட 75 பேரைக் கொண்ட செனட் சபை ஒன்று உரு­வாக்­கப்­பட வேண்டும். இச்­செனட் சபை­யா­னது பாரா­ளு­மன்­றத்தின் எதேச்­சா­தி­கார செயற்­பா­டு­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தாக அமைதல் வேண்டும்.

மேலும் சிறு­பான்மை சமூ­கத்தைச் சேர்ந்த ஒருவர் உப­–ஜ­னா­தி­ப­தி­யாக பாரா­ளு­மன்­றத்­தினால் தெரி­வு­செய்­யப்­ப­டுதல் வேண்டும் என்று குழு பரிந்­துரை செய்­துள்­ளது. இந்த நிலையில் மலை­ய­கத்தின் அமைப்­பொன்று இந்­தியத் தமிழர், இலங்கை தமிழர், முஸ்­லிம்கள் என்று மூன்று சிறு­பான்மை இனங்­க­ளையும் பிர­தி­நி­தித்­துவம் செய்யும் வகையில் மூன்று உப ஜனா­தி­ப­தி­களை நிய­மிக்க வேண்டும் என்று கருத்­த­றியும் குழு­விடம் பரிந்­துரை செய்­தி­ருந்­ததும் தெரிந்த விட­ய­மாகும். மேலும் கருத்­த­றியும் குழு இன்னும் பல பரிந்­து­ரை­க­ளையும் அர­சாங்­கத்­திற்கு முன்­வைத்­தி­ருக்­கின்­றது. மாகா­ணங்­க­ளுக்கு சிறி­ய­ள­வி­லான பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்க வேண்டும். ஒவ்­வொரு மாகா­ணத்­திற்கும் சட்­டமா அதிபர் ஒருவர் நிய­மிக்­கப்­பட வேண்டும். பொலிஸ் ஆணைக்­குழு ஸ்தாபிக்­கப்­பட வேண்டும். காணி அதி­கா­ரங்­களை பகிர்­வதில் தேசிய காணி ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட வேண்டும். மொழி, இனம், மதம் அல்­லது இனத்­துவ அடிப்­ப­டையில் எந்த அதி­கார அலகும் உரு­வாக்­கப்­படக் கூடாது என்றும் குழு பரிந்­து­ரைத்­துள்­ளது.

மலை­யக மக்கள் தொடர்­பி­லான பரிந்­து­ரை­களும் இடம்­பெற்­றுள்­ளன. அதி­காரப் பகிர்வு என்று வரும்போது மத்­திய மாகா­ணத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட ஒரு தனி­யான அர­சியல் அலகு ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும். கல்வி, சுகா­தாரம் உள்­ளிட்ட பல துறை­க­ளையும் சார்ந்­த­தாக இது இருக்க வேண்டும். தோட்டக் குடி­யி­ருப்­புக்கள் அனைத்­தையும் கிரா­ம­மாக பிர­க­ட­னப்­ப­டுத்த வேண்டும்.

No comments:

Post a Comment