08 August 2016

இனப்­ப­டு­கொலை அல்ல வலி­மை­யற்ற மக்­களை ஆயு­தத்­தோடு அர­சுக்கு எதி­ராக ­நிறுத்­தி­ய­து ­பு­லி­களின் முதன்­மை­யான தவறு

இலங்­கையில் இலட்­சக்­க­ணக்­கான அப்­பாவி தமி­ழர்கள் ஈவி­ரக்­க­மின்றி சர்­வ­தே­சத்தால் தடை செய்­யப்­பட்ட இர­சா­யன குண்­டு­களால் இனப்­ப­டு­கொலை செய்­யப்­பட்­டதை சர்­வ­தேச சமூகம் இன்­னும் கண்­டித்துக் கொண்­டி­ருக்­கி­றது. இந்த இனப்­ப­டு­கொ­லைக்கு நீதி கோரி உலகத் தமி­ழர்கள் இன்­னமும் போராடிக் கொண்­டி­ருக்­கின்­றனர். ஆனால் இலங்­கையில் நிகழ்ந்­தது இனப்­ப­டு­கொ­லையே அல்ல என்று எழுத்­தாளர் ஜெய­மோகன் கூறி­யுள்­ளது பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

விகடன் குழு­மத்தின் தடாகம் மாத இதழின் சுகுணா திவாகர், வெய்யில் ஆகி­யோ­ருக்கு எழுத்­தாளர் ஜெய­மோகன் அளித்த பேட்­டி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

கேள்வி: ஈழத்தில் நிகழ்ந்த இனப்­ப­டு­கொ­லைக்குப் பின்னால் இந்­திய அரசின் கரங்கள் இருந்­தன' என்ற விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. இந்­தியத் தேசி­யத்தை ஆத­ரிப்­பவர் என்ற முறையில் இது­கு­றித்த உங்கள் கருத்து என்ன? உங்­க­ளது 'உலோகம்' நாவல், இந்­திய அமை­திப்­படை குறித்த கட்­டுரை ஆகி­யவை தொடர்ச்­சி­யாக ஈழ­வி­டு­தலைக் குரல்­க­ளுக்கு எதி­ராக இருக்­கின்­ற­னவே?''

பதில்: முதலில் இலங்­கையில் நடந்­தது இனப்­ப­டு­கொலை கிடை­யாது என்­பது என் பார்வை. எந்த ஓர் அரசும் தனக்கு எதி­ராக சில குழுக்கள் போரில் ஈடு­ப­டும்­போது அதை ஒரு போரா­கத்தான் பார்க்­குமே தவிர, சிவில் சமூகத்தில் எதிர்ப்­பாகப் பார்க்­காது. நக்­சலைட் போலத்தான். 1960, 70-களில் புரட்­சி­கரக் கருத்­தியல் கால­கட்டம் உரு­வா­ன­போது, உலகம் முழுக்க அர­சுக்கு எதி­ரான பல புரட்­சிகள் நடந்­தன. காங்கோ, பொலி­வியா, இந்­தோ­னே­ஷியா, மலே­சியா என அது ஒரு பெரிய பட்­டியல். இந்­தி­யாவில் நக்­சலைட் இயக்­கங்­களைச் சேர்ந்­த­வர்­களை இந்­திய அரசு கொன்­றொ­ழித்­தது. ஆயி­ரக்­க­ணக்­கான இளை­ஞர்­களைக் கொன்­று­தானே இந்­தி­யாவில் நக்­சலைட் போராட்­டத்தை ஒழித்­தார்கள். இதே­மா­தி­ரி­யான செயற்­பாட்­டைத்தான் இலங்கை அரசும் மேற்­கொண்­டது. எனவே, அரசு தனக்கு எதி­ரா­ன­வர்­களைக் கொன்­றது என்­றுதான் பார்க்­கி­றேனே தவிர, அதை இனப்­ப­டு­கொலை என்று பார்க்கக் கூடாது.

படு­கொ­லை­யா­னார்கள். ஆனால் இலங்கை அரசு, தமி­ழர்­களை மட்டும் கொல்­ல­வில்லை. இலங்­கையைச் சேர்ந்த இட­து­சாரி இயக்­க­மான ஜே.வி.பி-.யைச் சேர்ந்த 72,000 பேரையும் அதே அர­சு­தானே கொன்­ற­ழித்­தது? கொல்­லப்­பட்­ட­வர்கள் சிங்­க­ள­வர்­கள்­தானே? எங்கே இரக்கம் காட்­டி­யது சிங்­கள அரசு? ஜே.வி.பி-.க்கு ஓர் அணு­கு­முறை, புலி­க­ளுக்கு ஓர் அணு­கு­முறை என்­றால்தான், அது சிங்­கள இன­வா­த­மாக இருக்க முடி­யும்­ ஆக, அங்கே நடந்­தது அரச வன்­முறை. அரசு தனக்கு எதி­ரான போரை, போரா­கத்தான் பார்க்கும். புலிகள் பெரும் போரைத் தொடங்­கி­னார்கள், அவர்கள் போரை எதிர்­கொண்­டுதான் ஆக வேண்டும்.

காந்தி ஏன் பிரிட்டிஷ் அர­சுக்கு எதி­ராக போரைத் தொடங்­க­வில்லை? ஆயுதம் ஏந்­தினால் என்ன நடக்­கு­மென்று அவ­ருக்குத் தெரியும். பிரிட்டிஷ் இரா­ணு­வத்தின் வாளை அதன் உறை­யி­லி­ருந்து உரு­வ­விடக் கூடாது என்­பதில் காந்தி தெளி­வாக இருந்தார். புலி­களின் முதன்­மை­யான தவறு, அவ்­வ­ளவு வலி­மை­யற்ற மக்­களை ஆயு­தத்­தோடு அர­சுக்கு எதி­ராகக் கொண்டு நிறுத்­தி­யது. இதை ஏற்­றுக்­கொண்­டுதான் நாம் மேலும் இது­கு­றித்துப் பேச முடியும்.

மேலும், ‘இலங்­கையில் அற­வழிப் போராட்­டங்கள் நடந்து, அதற்குப் பிறகும் அடக்­கு­முறை தொடர்ந்­த­தால்தான் ஆயுதப் போராட்டம் வந்­தது' என்று பலர் சொல்­கி­றார்கள். ஆனால், அது உண்­மை­யல்ல. செல்­வ­நா­யகம் போன்­ற­வர்­களால் நடத்­தப்­பட்ட அற­வழிப் போராட்டம் என்­பது குறைந்­த­கா­லம்தான். நீண்­ட­காலம் அங்கு ஆயுதப் போராட்­டம்தான் நடை­பெற்­றது. அதனால், குமரன் பத்­ம­நாபா போன்ற ஆயுதத் தர­கர்கள் பலன் பெற்­றார்கள் என்­ப­துதான் உண்மை. இது பெரும் உரை­யா­ட­லாகத் தொட­ர­வேண்­டிய விடயம் என்றார் ஜெய­மோகன்.

நன்றி- வீரகேசரி

No comments:

Post a Comment